டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நயன்தாராவும் நடிகர் விஜய்யும்

தென்னிந்திய திரையுலகில் இதுவரை வேறு எந்த நடிகையும் பெறாத லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியைப் பெற்றவர் நயன்தாரா. 

News image
பிகில் திரைப்படத்தில் நயன்தாரா - விஜய்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:52 am

பா. சசிகுமார்

தென்னிந்திய திரையுலகில் இதுவரை வேறு எந்த நடிகையும் பெறாத லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியைப் பெற்றவர் நயன்தாரா. 

2005ல் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நயன்தாரா அறிமுகமானார். அறிமுகமான புதிதில் இவர் கிராமப்பாங்கான கதாபாத்திரத்திற்கு தான் பொருத்தமாவார் என்கிற பிம்பம் இருந்தது. ஆனால் அந்த பிம்பத்தை பில்லா படத்தில் உடைத்தெறிந்தார்.  ஐயாவில் நடித்த நயன்தாராதானா என ஆச்சரியப்படுமளவுக்கு பில்லா  படத்தில் கிளாமர் மற்றும் ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களைக் கிறங்க அடித்திருப்பார். 

ரஜினி, விஜய், அஜித் என மாறி மாறி முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக குறுகிய காலத்திலேயே உயர்ந்தார். சூப்பர் ஸ்டார் முதல் வளர்ந்து வரும் ஜெய் வரை ஜோடி சேர்ந்துவிட்ட நயன்தாரா இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். நயன்தாரா விஜய்யுடன் மட்டும் 3 படங்களில் நடித்துள்ளார். வில்லு, பிகில் படங்களில் விஜய்க்கு ஜோடியாகவும் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கும்  நடனமாடியிருக்கிருக்கிறார். 

வில்லு படத்தில் மேஜர் சரவணன், அவரது மகன் புகழ் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பார். அதில் மகன் விஜய்யான புகழ் என்கிற  கதாபாத்திரத்திற்கு ஜோடிதான் நயன்தாரா. படத்தில் நயன்தாராவுக்கு பெரிய அளவில் நடிப்பு கிடையாது. மகன் விஜய்யைத் துரத்தி துரத்தி காதல் செய்யும் வேலையை மட்டுமே செய்திருப்பார். மற்றபடி பாடல்களில் கிளாமருடன் கூடிய துள்ளல் நடனத்தையும் நயன்தாரா வெளிப்படுத்தியிருப்பார். 

Story image

வில்லு படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா-விஜய் மீண்டும் ஜோடி சேர்ந்த படம்தான் பிகில்.  இந்தப் படத்திலும் விஜய்க்கு  இரட்டை வேடங்கள். ஆனால் படத்தில் ஒரு மாறுதலாக விஜய், நயன்தாராவை துரத்தித் துரத்தி காதலிப்பார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு ஒருசில காட்சிகளில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நயன்தாராவும் அதை சரியாக பயன்படுத்தியிருப்பார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு நடிக்க வாய்ப்பு இருக்காது. அந்த உண்மை நயன்தாரா, விஜய்யுடன் ஜோடி சேர்ந்த இரண்டு படங்களிலும் நிரூபணமானது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

அதனால்தான் என்னவோ நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து, அதுபோன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போதைய நிலவரப்படி கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையும் நயன்தாராதான்.

சினிமாவில் நயன்தாரா உச்சத்தில் இருந்தாலும் அவரைப் பற்றிய சர்ச்சைகளும் சலசலப்புகளும் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவர் காதலித்தது முதல், தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்தது வரை அனைத்தும் சர்ச்சைதான். ஆனால் எல்லா சர்ச்சைகளையும் சாதாரணமாகக் கடந்து, திரையுலகில் நட்சத்திரமாக மின்னிக்  கொண்டிருப்பதால்தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.