சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி தொடர்: வெளியான காரணம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ தொடர் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:12 am

DIN


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ தொடர் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

இதனையடுத்து நயன்தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. தற்போது அவர் தேன்மொழி பி.ஏ என்ற தொடரில் நடித்து வருகிறார். 

இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்தத் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story image

கரோனா இரண்டாம் அலையின் உச்சத்தின் இருந்தபோது இந்தத் தொடரின் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் உருவானது. அதன் காரணமாக இந்தத் தொடர் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

பின்னர் இந்தத் தொடரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பானது. ஆனால் எவ்வளவு முயன்றும் முன்புபோல் இந்தத் தொடரை சுவாரஸியமாக கொண்டு செல்ல முடியவில்லை. இதன் காரணமாகவே இந்தத் தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.