10 கோடி பார்வைகளைக் கடந்த நடிகர் விஜய் பட பாடல்: ரசிகர்கள் குஷி
நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடித்த கத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.


நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடித்த கத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற 'செல்பி புள்ள’ பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர்கள் விஜய் மற்றும் சமந்தா நடித்து வெளியான திரைப்படம் கத்தி. 2014ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார்.
இதையும் படிக்க | நடிகை பூனம் பாஜ்வாவின் இடையழகு - வைரலாகும் புகைப்படங்கள்
கிராமத்தின் தண்ணீர் வளத்தை அபகரிக்க முயலும் பெருநிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராடும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ’செல்பி புள்ள’ பாடல் ரசிகர்களின் விருப்பமான பாடலாக இருந்து வந்தது. இந்நிலையில் யூடியூப்பில் வெளியான இந்தப் பாடல் இதுவரை 10 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதையும் படிக்க | 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் முடியப்போகிறதா ? - நடிகை பதில்
3.55 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ள இந்தப் பாடலில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மதன்கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
10 கோடி பார்வைகளைக் கடந்ததைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...