பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி மூன்று ரசிகர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஐந்து ரசிகர்கள் விபத்தில் பலியாகியுள்ளார்கள்.
ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தனது 49-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
எனினும் பவன் கல்யாணின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் காரணமாக எட்டு ரசிகர்களின் உயிர் பறிபோயிருக்கிறது.
ஆந்திராவின் சித்தூரில் நேற்றிரவு பவன் கல்யாணின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி மூன்று ரசிகர்கள் உயிரிழந்தார்கள். மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவத்தில் பலியான மூவருக்கும் தலா ரூ. 2 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ளார் பவன் கல்யாண்.
இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த ஆறு மணி நேரத்தில் மற்றொரு துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் பவன் கல்யாணின் பிறந்த நாளைக் கொண்டாடிய ஐந்து ரசிகர்கள், வீட்டுக்குத் திரும்பியபோது அவர்கள் பயணம் செய்த கார், டிரக்கில் மோதியது. இச்சம்பவத்தில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


