சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கடந்த வியாழன் அன்று வெளியானது.
இந்நிலையில் தர்பார் படம் மதுரை கேபிள் சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் புகார் தெரிவித்தார்கள். இந்த ட்வீட்டை முன்வைத்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், ட்விட்டரில் கூறியதாவது:
இது அக்கிரமம். பைரசி உச்சத்தில் உள்ளது. பெரும்செலவு செய்து எடுக்கப்பட்ட தர்பார் படம் கேபிள் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தர்பார் படம் வாட்சப் மற்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதைத் தடுக்கவேண்டும் என்று லைகா பட நிறுவனம் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது. தர்பார் படம் வாட்சப்களில் பகிரப்பட்டு வருகிறது. யாரும் திரையரங்குக்குச் செல்லக்கூடாது. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட வேண்டும் என்கிற தவறான எண்ணத்துடன் வாட்சப்களில் தர்பார் படம் பகிரப்பட்டு வருகிறது. இது சட்டப்படி தவறானது. இதனால் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


