/

மதுரை கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்: லைகா நிறுவனம் புகார்

தர்பார் படம் மதுரை கேபிள் சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் புகார் தெரிவித்தார்கள்.

News image
Updated On :13 ஜனவரி 2020, 12:05 pm

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கடந்த வியாழன் அன்று வெளியானது.

இந்நிலையில் தர்பார் படம் மதுரை கேபிள் சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் புகார் தெரிவித்தார்கள்.

இந்த விவகாரம் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரை கேபிள் சேனலில் தர்பார் படம் சட்டவிரோதமாக ஒளிபரப்பான தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இதையடுத்து மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். தமிழ்த் திரையுலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.