பிரபல திரைப்பட விமரிசகர் பரத்வாஜ் ரங்கன், சமீபத்தில் வெளிவந்த சில்லுக் கருப்பட்டி படத்துக்கு விமரிசனம் எழுதியிருந்தார். அதற்கு வந்த ஒரு எதிர்வினையை ட்விட்டரில் பகிர்ந்தார்.
ரஜினி, விஜய் போன்றோரின் வெற்றிப் படங்களுக்கு மத்தியில் இப்படியொரு படம் வந்திருப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. எனக்குப் படம் பார்க்க ஆசையாக உள்ளது. ஆனால் காது கேளாத வயதானவன் நான். என்னால் திரையரங்குக்குச் செல்ல முடியாது. எனவே இந்தப் படம் அமேஸான் பிரைமில் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது தான் எனக் கூறியிருந்தார்.
ஒரு படம் இணையத்தில் (ஓடிடி) வெளியாகும் வரை காத்திருக்காமல் திரையரங்குக்குச் சென்று பாருங்கள் என எப்போதும் கூறுவேன். ஆனால் சிலருக்கு நிஜமாகவே போக முடியாத நிலை இருக்கும். அவர்களுக்கு ஓடிடி எவ்வளவு உபயோக உள்ளது என்பதற்கு உதாரணம் இது என்று ட்விட்டரில் பதிவு எழுதினார் பரத்வாஜ் ரங்கன்.
இதைப் படித்த சில்லுக் கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம், பரத்வாஜ் ரங்கனுக்குப் பதில் அளித்ததாவது:
கடவுளே, இது மிகவும் உணர்வுபூர்வமாக்குகிறது.
இதை நான் சொல்லக்கூடாது. ஆனால் பின்விளைவுகளைச் சந்தித்துக்கொள்கிறேன். சில்லுக் கருப்பட்டி படம் அடுத்த மாதம் நெட்பிளிக்ஸ் வெளியாகும் என அவரிடம் தயவுசெய்து சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


