பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மிரட்டும் விநியோகஸ்தர்கள்: பாதுகாப்பு கேட்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு!

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி...

News image
Updated On :6 பிப்ரவரி 2020, 5:38 am

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மனு அளித்துள்ளார்.     

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்ததாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது. 

ஆனால், தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லை என்கிற புகாருடன் ரஜினியை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளார்கள் விநியோகஸ்தர்கள். கடந்த வாரம், சென்னையிலுள்ள ரஜினியின் இல்லத்துக்கு நேரில் சென்று பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல இந்த வாரமும் தர்பார் படத்தை வட ஆற்காடு - தென் ஆற்காடு, திருநெல்வேலி, மதுரை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகிய இருவரையும் சந்திக்க முயன்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, இதுபோல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டால், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மனு அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.