தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து தங்கள் படங்களை விழாவிற்கு கொண்டு வந்திருந்த சுயாதீன திரைப்பட படைப்பாளிகள சந்தித்த அமைச்சர் அவர்களை ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில் தேசிய திரைப்படவளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் கல்யாணி, சென்னை மண்டல் இயக்குனர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், டாக்டர் ரமேஷ், தென்னிந்திய திரைப்பட சம்மேள செயலாளர் ரவி கோட்டாக்காரா, திரைப்பட இயக்குனர் இரா பார்த்திபன், லட்சுமி ராமகிருஷ்ணன். ஏவிஎம்சண்முகம், அருண் வைத்தியநாதன், தயாரிப்பாளர்கள் வெங்கட், எம்எஸ்மகேஷ், நடிகை அனுபமா , நடிகர் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர். நூற்றுக்கும் அதிகமான தமிழ் திரைப்பட துறை மாணவர்களும் திரைப்படத் துறையினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.