தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது.
புரட்சித்தலைவி என ஜெயலலிதா அழைக்கப்பட்டதால், தமிழில் தலைவி என்றும், ஹிந்தியில் ஜெயா என்ற பெயரிலும் இத்திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.
இந்நிலையில் இந்தப் படம் அடுத்த வருடம் ஜூன் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் அதன் விடியோவும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


