வழக்கம் போல அனோஷ்கா, ஆத்விக்குடன் ஷாலினியை டின்னருக்கு அழைத்து வருவது போல் அஜித் அழைத்து வர, அதற்கு முன்னரே முன்னேற்பாடாக தோழியர் காத்திருக்க, ஒவ்வொருவரும் ஷாலினியை ஏதேச்சையாக சந்தித்தது போல் கைகுலுக்க, எதிர்பாராத இந்த சந்திப்புக்களால் ஷாலினி திக்குமுக்காடிவிட்டார். எங்க இருக்க எப்படி இருக்கே என்று தன்னுடைய ப்ரெண்ட்ஸ்களை கட்டி பிடித்து நெகிழ்ச்சி அடைந்தார். ஷாலினியின் மகிழ்ச்சியைப் பார்த்து புன்னகைத்தபடி ரசித்தார் அஜித். ஒவ்வொருத்தராக சர்ப்ரைஸாக ஆஜர் ஆக, ஒரு கட்டத்தில் ஷாலினி இது திடீர் சந்திப்பு அல்ல, ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு என்பதைக் கண்டுபிடித்துவிட்டார். அதுவும் இந்த அழகான வேலையைச் செய்தவர் தன் அன்பான கணவர்தான் என்பதும் அவருக்கு தெரிந்துவிட்டது. அதற்கு பின் கொண்டாட்டம் களை கட்ட, ஷாலினியின் போட்டோக்கள் நிறைந்த அந்த அரங்கில் சுற்றமும் நட்பும் புடைசூழ கொண்டாடி மகிழ்ந்தனர் அஜித் தம்பதியர்.