கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சூரரைப் போற்று படத்துக்கு அடுத்து சூர்யாவை இயக்குபவர் யார்?

சுதா கோங்கிராவின் இயக்கத்தில் 'சூரரைப் போற்று' படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

News image
surya
Updated On :31 ஜனவரி 2024, 1:06 pm

SIVA

சுதா கோங்கிராவின் இயக்கத்தில் 'சூரரைப் போற்று' படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் மாதத்தில் இப்படம் வெள்ளித்திரை காணும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் சூர்யாவின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக சூர்யாவின் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

பொதுவாக ஒரு படம் முடிவடையும் நிலையில் தங்களது அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் வழக்கம் கோலிவுட் ஹீரோக்களிடையே நிலவி வருகிறது. என்.ஜி.கே, காப்பான் போன்ற படங்களில் விமரிசனரீதியாக கவனம் பெறாத காரணத்தால் சூர்யா படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். 

கேப்டர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் சூரரைப் போற்று படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை 2டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து தயாரித்துள்ளார்கள். 

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குகாக சிவா இயக்கத்தில் புதிய படமொன்றுக்கு தேதிகள் கொடுத்திருந்தார் சூர்யா. ஆனால் சிவா ரஜினியுடன் படம் பண்ணுவதால் இந்தப் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. பாலா, ஹரி, பத்ரி அல்லது வெற்றிமாறன் இவர்களில் ஒருவர் சூர்யாவை இயக்கப் போகிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.