பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஹூம்... பிரதமர் சந்திப்பில் பாடகர் எஸ்பிபிக்கு ஏற்பட்ட மன வருத்தம்! 

ஆனானப்பட்ட எஸ்பிபிக்கே இந்த நிலை என்றால்?! 

News image
SPB ORDEAL
Updated On :31 ஜனவரி 2024, 1:00 pm

RKV

பிரதமர் மோடி பாலிவுட் திரை நட்சத்திரங்களை சமீபத்தில் தனது இல்லத்தில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் எஸ் பி பி யும் ஒருவர். சந்திப்பு முடிந்து திரும்பியவருக்கு ஒரு
சின்ன ஏமாற்றம். அதை அவரே தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலருடன் இணைந்து பங்கேற்ற அந்தச் சந்திப்பில் எஸ் பி பி க்கு என்ன மன வருத்தம் நேர்ந்திருக்கக் கூடும் என்று தானே யோசிக்கிறீர்கள்... 

முதலில் இப்படியொரு வாய்ப்பை அளித்த ஈநாடு பத்திரிகையின் ராமோஜி ராவுக்கு நன்றி பகரும் எஸ் பி பி தொடர்ந்து குறிப்பிடுகிறார் தனக்கு அங்கு நேர்ந்த துன்பத்தை;

நாங்கள் அனைவரும் அக்டோபர் 29 அன்று, மதிப்பிற்குரிய பிரதமர், அவரது இல்லத்தில் எங்களுக்கு அளித்த விருந்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். அப்போது என்னுடையது உட்பட பலரது அலைபேசிகளும் நுழைவாயிலிலேயே பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டு அங்கேயே பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், உள்ளே சென்று பார்த்த போது நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன். அங்கே பாலிவுட் திரை நட்சத்திரங்கள் பலரும் பிரதமருடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

Caption

Caption

இதைப் பார்த்ததும் எனக்கு குழப்பமாகி விட்டது. சில விஷயங்கள் இப்படித்தான் நம்மை HMMM??? சொல்ல வைத்து விடுகின்றன. என்று கொஞ்சம் ஏமாற்றத்துடன் தமது மன வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார் எஸ்பிபி.

ஆனானப்பட்ட எஸ்பிபிக்கே இந்த நிலை என்றால்?! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.