பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது நட்பு வட்டம், குடும்பம், நடிப்பு உள்ளிட்டவை குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் வழியாக சன்னி லியோன் அளித்த பேட்டி பின்வருமாறு:
கடந்த 2012-ஆம் ஆண்டு ஜிஸம்-2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானேன். ராகினி எம்எம்எஸ் 2, ஏக் பஹேலி லீலா, குச் குச் லோசா ஹை, மஸ்திஸாதா, ஒன் நைட் ஸ்டாண்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடத்துள்ளேன். தற்போது கோக-கோலா என்ற ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடத்து வருகிறேன்.

இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் சிலர் எனது கடந்த காலத்தை சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர். ஆனால், அதுகுறித்து நான் ஒருபோதும் கவலைகொண்டதில்லை. நான் எனக்கான இடத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். எனக்கென சிறிய அளவில் நட்பு வட்டம் உள்ளது.
நட்சத்திர விடுதி கொண்டாட்டங்களில் அதிகளவில் கலந்துகொள்ள மாட்டேன். 2011-ல் எனது நீண்டநாள் காதலர் டேனியல் வெப்பரை திருணம் செய்துகொண்டேன். 2017-ல் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்துக்கொண்டோம். வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் உள்ளது.

குடும்ப வாழ்க்கையும், திரை வாழ்க்கையும் இணைந்து செயல்படுவதில் மிகவும் கடினமாக உள்ளது. ஆனாலும், அதை சமாளித்து வருகிறேன். குழந்தைகளை கவனிப்பதே இந்த உலகின் மிகச்சிறந்த செயலாகும். எனது வாழ்க்கையில் தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் உள்ளேன்.
17 வருடங்களாக பொழுதுபோக்குத் துறையில் இருந்து வருகிறேன். இதில் எனக்கு பெரியளவில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதும் புரிந்துகொண்ட படைப்பாளிகள் என்று யாரும் கிடையாது. எனவே பிற திரைப்படங்கள் குறித்து எப்போதும் விமர்சிக்க மாட்டேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என எப்போதும் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


