நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாம்பலம் என்.கே.எஸ். நடராஜன் தலைமையில் 76 பேர் கலந்து கொண்ட மங்கல இசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன் ஊரான பண்ணைபுரம் கிராமம், தந்தை ராமசாமி, தாய் சின்னத்தாய், சகோதரர்கள் பாவலர், பாஸ்கர், சகோதரி கமலம், இசை குருமார்கள் தன்ராஜ் மாஸ்டர், ஜி.கே.வெங்கடேஷ், டி.வி.கோபாலகிருஷ்ணன், தெட்சிணாமூர்த்தி சுவாமி, திரை இசையில் அவரை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம், தான் வணங்கி வரும் ரமண மகரிஷி ஆகியோரை காணொளியில் காண்பித்தார்.