சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி 'மிஸ்டர் லோக்கல்' பட டீசர் வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயனின் 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசரை ஞாயிறன்று படக்குழு வெளியிட்டுஉள்ளது.


சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசரை ஞாயிறன்று படக்குழு வெளியிட்டுஉள்ளது.
சீமராஜா படத்தைத் தொடர்ந்து 'சிவா மனசுல சக்தி' படப் புகழ் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் லோக்கல். இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா, சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசரை ஞாயிறன்று படக்குழு வெளியிட்டுஉள்ளது.
இப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...