ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரஜினி, கமல், விஜய், அஜித்தின் ஆண்டு வருமானம்: ஃபோர்ப்ஸ் தகவல்

2019-ம் ஆண்டுக்கான பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2019, 7:26 am

2019-ம் ஆண்டுக்கான பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவில் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. புகழ் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்திய அளவிலான பட்டியலில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, முதலிடம் பிடித்துள்ளார். அக்டோபர் 1, 2018  முதல் செப்டம்பர் 30, 2019 வரை ரூ. 253 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் விராட் கோலி.  பட்டியலில் அக்‌ஷய் குமாருக்கு 2-ம் இடமும் சல்மான் கானுக்கு 3-ம் இடமும் அமிதாப் பச்சனுக்கு 4-ம் இடமும் தோனிக்கு 5-ம் இடமும் கிடைத்துள்ளன. 

இந்தப் பிரபலப் பட்டியலில் தென்னிந்திய அளவில் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்திய அளவில் ரூ. 100 கோடி வருமானத்துடன் அவர் 13-ம் இடத்தைப் பிடித்துள்ளார். ரூ. 94.8 கோடி வருமானத்துடன் ஏ.ஆர். ரஹ்மான் 16-ம் இடத்தைப் பிடித்துள்ளார். ரூ. 30 கோடி வருமானத்துடன் விஜய் 47-ம் இடமும் ரூ. 40.5 கோடியுடன் அஜித் 52-ம் இடமும் பிடித்துள்ளார்கள். கமலின் ஆண்டு வருமானம் ரூ. 34 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த தென்னிந்திய சினிமா பிரபலங்கள்

13. ரஜினி
16. ஏ.ஆர். ரஹ்மான்
27. மோகன் லால்
44. பிரபாஸ்
47. விஜய்
52. அஜித்
54. மகேஷ் பாபு
55. ஷங்கர்
56. கமல்
62. மம்மூட்டி
64. தனுஷ்
77. திரிவிக்ரம்
80. இயக்குநர் சிவா
84. கார்த்திக் சுப்புராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.