உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய உடல்நலத்தைப் பேணிக் காக்கவேண்டும் என பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்ஷய் குமாரிடம், அமித் ஷாவிடம் நீங்கள் கேட்கவேண்டியது ஏதாவது உள்ளதா எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அக்ஷய் குமார், அமித் ஷா அவர்களிடம் நான் கேட்கவேண்டியது ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
நம் நாட்டின் முக்கியமான நபர் அவர். மாலை 6.30 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம் என அவருக்கு அறிவுரை கூறுவேன். அது அவருக்கு நல்லது. அவர் அப்படிச் செய்தால் அனைவருக்கும் நல்லது. சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிடக்கூடாது என்று நம் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. நம் உடல்நலத்துக்கு இது நல்லது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கூரையிலிருந்து தவறிவிழுந்து தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் பலி
திரைக் கதிர்
பயணம் தொடரும்...
மீனவர்களின் வாழ்வு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


