மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் இணையத் தொடராகவும் உருவாகி வருகிறது. கெளதம் மேனன் - பிரசாந்த் முருகேசன் இணைந்து இயக்கி வரும் குயின் என்கிற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று இணையத் தொடரில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த இணையத் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதா எனது அத்தை. அவரது சட்டப்படியான வாரிசு நான். என்னுடைய அனுமதியைப் பெறாமல், எனது அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவும், இணையதள தொடராகவும் எடுக்க சிலா் முயற்சிக்கின்றனா். சென்னையைச் சோ்ந்த திரைப்பட இயக்குநா் ஏ.எல். விஜய், ‘தலைவி’ என்ற பெயரில் தமிழ் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், ஹைதராபாத்தைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் ‘இந்தூரி ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியில் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதள தொடா் எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனா். எனவே என்னுடைய அனுமதி இல்லாமல் எனது அத்தையும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா குறித்த திரைப்படத்தையோ, இணையதள தொடா்களையோ எடுக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகவோ, இணையதள தொடா்களையோ எடுக்க தடை கோரி உரிமையியல் வழக்குத் தொடர, ஜெ.தீபாவுக்கு அனுமதியளித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த படங்கள் தற்போது தான் தொடங்கியுள்ளன. ஆனால் குயின் இணையத் தொடர், சனிக்கிழமை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது என ஜெ. தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கின் ஆவணங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என கெளதம் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் ஆவணங்களை கெளதம் மேனனுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தீபா தரப்புக்கும் பதில் மனு தாக்கல் செய்ய கெளதம் மேனன் தரப்புக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


