ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இசையமைப்பாளரைக் காதலிக்கும் இளம் நடிகை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

Published On :31 ஜனவரி 2024, 6:57 pm IST

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். 54 வயதாகும் அமீர் கானுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் உள்ளனர்.

Story image

இவரது மனைவியின் பெயர் ரனா தத்தா. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த அவர் லகான் படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவ் என்பவரை 2005-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார். 

Story image

அமீர்கானின் மகள் ஐரா தற்போது நாடகத்தில் தீவிர ஈடுபாட்டுடன் இருக்கிறார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் ஐரா, அண்மையில் இளைஞர் ஒருவருடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இவர்தான் உங்கள் பாய் பிரண்டா என்று ஒருவர் கேட்டதற்கு பதில் எதுவும் கூறவில்லை. பொதுவாக கமெண்டுக்கு பதிலுரைகளை பிரபலங்களோ அவர்களது அட்மினோ கூறுவதில்லை. அவற்றை கடந்து போய்விடுவார்கள். மீண்டும் வேறொரு பதிவில்  நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஐரா இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பதில் அளித்துள்ளார். ஆனால் நேரடியாக கூறாமல் அப்பதிவின் ஹாஷ் டேக்கில் லவ், மிஸ் யூ, ரிலேஷன்ஷிப் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இதனால் அவர் காதலில் விழுந்துள்ளார் என்பதை ரசிகர்கள் யூகம் செய்து கேள்விகளை அடுக்கினார்கள்.

Story image

ஐரா காதலிப்பதாக கூறப்படுபவர் மிஷால் கிருபளானி என்ற இசையமைப்பாளர். இவர்தான் என்னவர் என்று இன்ஸ்டாகிராம் ஹாஷ் டாக்குகளில் சூசகமாக தெரிவித்துள்ளார் ஐரா. இந்த ஜோடியின் நெருக்கமான புகைப்படங்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிடும் போது சிலர் உங்கள் அப்பாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்தாலும்,. பலரும் ஐராவின் காதலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.