பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 250 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று வெளியான சாஹோ படத்துக்குக் கிடைத்துள்ள விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. பலரும் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களை அளித்துள்ள நிலையில் வசூலில் அசத்தியுள்ளது சாஹோ படம்.
முதல் நாளன்று இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் இதன் வசூல் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திராவில் ரூ. 42 கோடியும் தெலங்கானாவில் ரூ. 14 கோடியும் ஹிந்தி மொழியில் இந்தியா முழுக்க ரூ. 24 கோடியும் தமிழ்நாட்டில் ரூ. 4 கோடியும் கர்நாடகாவில் ரூ. 14 கோடியும் வசூலித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் வெளியான ஹிந்திப் படங்களில் இந்தியாவில் அதிகம் வசூலான படங்களின் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சாஹோ படம் முதல் நாளன்று உலகம் முழுக்க ரூ. 130 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


