மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சிக்ஸர் படத் தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ்!

அவருடைய புகைப்படத்தையும் வசனத்தையும் தவறாகப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்...

News image

சிக்ஸர் படக் காட்சி (ஸ்னீக் பீக்)

Updated On :29 ஆகஸ்ட் 2019, 12:07 pm

வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ், ராதாரவி நடிப்பில் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிக்ஸர். தயாரிப்பு - தினேஷ் கண்ணன், ஸ்ரீதர். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மூத்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தன்னுடைய புகைப்படத்தையும் சின்னத்தம்பி பட வசனங்களையும் சிக்ஸர் படத்தில் தவறான முறையில் அவதூறாகப் பயன்படுத்தியதாக கவுண்டமணி குற்றம் சுமத்தியுள்ளார். சிக்ஸர் படத்தின் விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டுள்ள ஸ்னீக் பீக் விடியோவில் கவுண்டமணி குறிப்பிடும் காட்சி அமைந்துள்ளது. 

கவுண்டமணியின் நற்பெயருக்குக் கெடுதல் விளைவிக்கும் காட்சியை நீக்கவேண்டும். மேலும், அவருடைய புகைப்படத்தையும் வசனத்தையும் தவறாகப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படிப் படத்தின் காட்சியை நீக்காமல் மன்னிப்பும் கேட்காமல் இருந்தால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுண்டமணி சார்பாக வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.