மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மிஷன் மங்கள் படத்துக்கு மஹாராஷ்டிராவில் வரி விலக்கு!

இந்தப் படத்துக்கு மஹாராஷ்டிராவில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பலரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்தச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :29 ஆகஸ்ட் 2019, 7:36 am

பூமி கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்துக்கு (செவ்வாய்) இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் மங்கள்யான். கிரகங்களுக்கு இடையே செலுத்தப்படும் விண்கலத்தை வடிவமைத்து, திட்டம், கண்காணித்து, நிர்வகித்து, இயக்கவல்ல தொழில்நுட்பத் திறன் இந்தியா வாய்க்கப் பெற்றுள்ளதை உலகிற்கு பறைசாற்றவே மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

உலக நாடுகளின் கிரகக் குடியேற்றத்தின் இலக்காகத் திகழ்ந்துவரும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலனை அனுப்புவதற்காக "மங்கள்யான்' என்ற கனவுத் திட்டத்தை இஸ்ரோ வடிவமைத்தது. உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மங்கள்யான் விண்கலம், 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியின் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு விண்கலம் அனுப்பிய ஐரோப்பிய, அமெரிக்க, ரஷிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து, உலகளவில் புதிய வரலாறு படைத்தது. மேலும், உலக அளவில் முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த ஒரே நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆசிய அளவில் இந்த முயற்சியில் வென்ற முதல் நாடும் இந்தியாதான். 13.4 கிலோ எடை கொண்ட மங்கள்யான் ஆய்வு விண்கலம், விண்ணில் செலுத்தப்பட்டு 298 நாள்கள் கடந்த பிறகு, 2014-ஆம் ஆண்டு செப்.24-ஆம் தேதி செவ்வாய்கிரக வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, உலக வரலாற்றில் இந்தியா மீண்டும் சாதனை படைத்தது. 6 மாதங்களுக்கு ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், 4 ஆண்டுகள் கடந்தும் ஆய்வுப் பணியைத் தொய்வின்றி தொடர்ந்துள்ளது இஸ்ரோவின் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. மங்கள்யான், ஒரு விண்கலம் மட்டுமல்ல, அது இந்தியர்களின் அறிவியல் ஆளுமையின் உச்சம் என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு மங்கள்யான்-2 விண்கலத்தை செவ்வாய்கிரகத்துக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்தக் கனவுத் திட்டத்தை முன்வைத்து மிஷன் மங்கள் என்றொரு ஹிந்திப் படம் உருவாகி, சமீபத்தில் வெளியானது. அக்‌ஷய் குமார், வித்யா பாலன், தாப்சி, நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். பால்கியிடம் பணியாற்றிய ஜெகன் சக்தி இப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.

ஆகஸ்ட் 15 அன்று வெளியான இப்படம் ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. இந்தியாவில் அக்‌ஷய் குமார் நடித்து விரைவாக ரூ. 100 கோடியை எட்டிய படம் என்கிற பெருமையை எட்டியது. இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ. 170 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு மஹாராஷ்டிராவில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பலரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்தச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.