பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

'காலா' பார்க்க லீவ் லெட்டரை இப்பவே தயார் பண்ணுங்க! ரசிகர்களிடம் தனுஷ் ட்விட்டரில் கோரிக்கை!

தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:09 pm

ராக்கி

தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா. இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும், தனிப்பட்ட முறையில் ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகு வெளியாகும் அவருடைய முதல் படம் இது. இதுவும் இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், 'காலா' படத்தின் ட்ரைலர் இன்றிரவு 7 மணிக்கு வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் படம் வெளியாகவிருக்கும் ஜூன் 7 அன்று ஆபிசுக்கு லீவ் எடுக்க, இப்போதே லீவ் லெட்டர் தயார் செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.

ட்விட்டர் காலா படத்துக்காக பிரத்யேக எமோஜியை உருவாக்கியுள்ளது. ஹேஷ்டேக் போட்டு காலா என்று டைப் செய்தால், அது காலா எமோஜியாக மாறிவிடும். இதனால், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர்.தமிழ் சினிமா வரலாற்றில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்துக்கு பிறகு ட்விட்டர் எமோஜியை வெளியிடும் இரண்டாவது தமிழ் படம் காலா ஆகும்.

இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.