பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறாரா ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்?

அஜித் தற்போது, சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:28 pm

ராக்கி

அஜித் தற்போது, சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அடுத்த படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீதேவி மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர் அஜீத். முன்னதாக போனிகபூர் தயாரித்த, 'இங்கிலீஷ் விங்கிலிஷ்' எனும் படத்தில் ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்கிணங்கி, கேமியோ ரோலில் நடித்தார். ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அஜித்தை கலங்கச் செய்துவிட்டது. பதினாறாவது நாள் காரியம் சென்னையில் இருக்கும் ஸ்ரீதேவியின் வீட்டில் நடந்தபோது, மனைவி ஷாலினியுடன் அங்கு சென்று ஸ்ரீதேவிக்கு இறுதி மரியாதை செலுத்தினார். 

Story image

விசுவாசம் படப்பிடிப்பு முடிந்த பின்னர், இயக்குநர் வினோத்துடன் அடுத்த படத்தில் கை கோர்க்கவுள்ளார் அஜித்.  தல 59 என்று தற்போது கூறப்படும் இந்தப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல் வெளி வந்துள்ளது. போனி கபூர் இறுது முடிவெடுத்த பின்னர், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்று தெரிகிறது. 

இதற்கிடையில் அஜித் பிரபு தேவாவுடனும் ஒரு படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தை KJR Studios தயாரிக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.