பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விடைபெறும் நடிகை சமந்தா!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் திரைப்படம் ‘சீமராஜா’. இந்தப் படத்தில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:27 pm

ராக்கி

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் திரைப்படம் ‘சீமராஜா’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். கிராமத்துப் பெண்ணாக நடித்த சமந்தா இந்தப் படத்துக்காக சமந்தா சிலம்பம் கற்றுக் கொண்டார்.  தேனி, கேரளா உட்பட பல பகுதிகளில் நடைபெற்று வந்து இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. 

Story image

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை பதிவிட்டுள்ளார் சமந்தா. அதில், 'மார்ச் மாதம் தான் ஆகிறது. இந்த ஆண்டு எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கிறது. சீம ராஜாவில் எனது பங்களிப்பு நிறைவடைந்துவிட்டது. நன்றியும் மகிழ்ச்சியும். 24ஏஎம் ஸ்டுடியோஸ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர்க்கு என் நன்றி பெஸ்ட் டீமாக ஆக்கிய சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராமுக்கும் நன்றி’ என சமந்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

And its a wrap for me on SeemaRajaIt’s only March and the year has offered so much alreadyGratefuland happyThankyou to my wonderful team24AMSTUDIOSivaKartikeyanfor being the bestponram

சமந்தாவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படங்கள் இரும்புத் திரை, மகாநதி மற்றும் ரங்கஸ்தலம் ஆகியவை.

24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சீம ராஜா படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் 12-வது படமான இது விநாயகர் சதுர்த்தி அன்று (செப்டம்பர் 13) வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.