பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆர்ஜே நவலட்சுமியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்! (படங்கள்)

சூது கவ்வும், நேரம், காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருபவர் ரமேஷ் திலக்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

ராக்கி

சூது கவ்வும், நேரம், காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருபவர் ரமேஷ் திலக். ரேடியோ ஜாக்கியாக கலக்கிக் கொண்டிருந்தவர் வெள்ளித் திரையில் நடிக்கத் தொடங்கி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

Story image

ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் ஆர்ஜேவாகவே நடிகை ரித்திகாவுடன் நடித்திருப்பார் ரமேஷ் திலக். அப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. திரையில் ஆர்ஜேவை காதலித்த ரமேஷ் திலக்கின் மனத்தைக் கவர்ந்தவர் ஒரு ஆர்ஜே தான்.

Story image

சன் ம்யூசிக்கில் பணிபுரியும் ஆர்ஜே நவலட்சுமி. கோலிவுட்டின் பிரபல ஃபைட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகள்தான் நவலட்சுமி. ரமேஷ் திலக்கும் நவலட்சுமியும் காதலித்து வருவதை அறிந்த அவர்களது பெற்றோர், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, கடந்த 2017 ஆண்டு இவர்களது திருமன நிச்சயதார்த்தம் நடந்தது.

Story image

இன்று (மார்ச் 3, 2018) காலை பெசண்ட் நகர் முருகன் கோவிலில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் ஆசியுடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. 

இவர்களது திருமண புகைப்படங்கள் சில :

**

Story image

**

Story image

**

Story image

**

Story image

**

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.