குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

மகளின் திறமையை ரசித்த நடிகர் விஜய் - வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவில் நடைபெற்ற பாட்மின்டன் போட்டியில், தனது மகள் திவ்யா சாஷாவின் திறமையை ரசித்தார் நடிகர் விஜய்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

Raghavendran

நடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றவுள்ளார்கள். இதில் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Story image

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படமிது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. 

Story image

பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது மகள் திவ்யா சாஷா பங்கேற்ற அமெரிக்காவில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியை நேரில் சென்று ரசித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.