பிக்பாஸ் சீஸன் 2 ஒளிபரப்பாகத் தொடங்கி 2 நாட்கள் கடந்திருக்கின்றன. அதற்குள், சீஸன் 1 க்கு இருந்த எதிர்பார்ப்பும் வரவேற்பும் சீஸன் 2 க்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சில செய்திகள் மக்களை மூளைச்சலவை செய்யும் வேலையில் கட்டவிழ்க்கப் பட்டிருக்கின்றன. இதோ பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்ஜே ரம்யா, பிக்பாஸ் வீட்டில் தனது சக போட்டியாளர்களுடன் நீச்சல் குளத்தில் குளிக்கையில் ஸ்விம்சூட் அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் இன்று வைரலாகத் தொடங்கி விட்டன என இணைய ஊடகமொன்றில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். வாசிக்கையில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நீச்சல் குளத்தில் ஒரு பெண் ஸ்விம் சூட் அணிந்து குளிப்பதெல்லாம் இன்று சாதாரண விஷயம். ஸ்விம்சூட் அணிந்து கொண்டு அவர் காய்கறி வாங்க மார்கெட்டுக்குச் சென்றால் தானே அது பரபரப்புச் செய்தியாக இருக்கக் கூடும். அவர் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் நீச்சல்குளத்தில் குளித்தார் என்பதில் என்ன வைரல் இருக்கிறதோ? என்று சிலர் கருதலாம். ஆனால் இதைக் குறித்து நிகழ்ச்சியின் ஆங்கரான கமல் ஹாசனுக்கு புகார் அளித்திருக்கும் ஹரிபிரபாகர் எனும் பிக் பாஸ் ரசிகர் அப்படிக் கருதவில்லை. அவர் என்ன சொல்கிறார் எனில்,