நடிகை மஞ்சு வாரியரின் தந்தை மாதவன் வாரியரின் மறைவையொட்டி மஞ்சுவின் முன்னாள் கணவரும் நடிகருமான திலீப் தன் மகள் மீனாட்சியுடன் இன்று மஞ்சுவின் தந்தை வீட்டுக்குச் சென்றார். திலீப்புக்கும் மஞ்சு வாரியருக்கும் திருமணமாகி மீனாட்சி என்ற மகள் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தனர். விவாகரத்துக்கு காரணமாக நடிகர் திலீப்புக்கு, நடிகை காவ்யா மாதவனுடன் இருந்த தொடர்பு குறித்து மலையாளப் படவுலகில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கிசு கிசுவின் காரணமாக, காவ்யா மாதவனுக்கு ஏற்பட்ட உளச்சிக்கலுக்கு பொறுபேற்று திலீப், காவ்யாவை இரு வருடங்களுக்கு முன்பு முறைப்படி இரண்டாவது மனைவியாக மணந்துகொண்டார். இதற்கு முதல் மனைவி மஞ்சு வாரியர் மூலம் பிறந்த மகளான மீனாட்சியின் ஒப்புதலும் இருந்ததாகக் கூறப்பட்டது.