அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி.
இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு படவிழாவில் இயக்குநர் சிவா கூறியதாவது: விசுவாசம் படப்பிடிப்பு 40 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்.
சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.

தற்போது அனிகா, அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்தில் அவருக்கு மகளாக நடிக்கிறார் என்றனர் படக்குழுவினர். கடந்த 2015-ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து 'நானும் ரெளடி தான்' மற்றும் 'மிருதன்' ஆகிய படங்களில் நடித்தார். அண்மையில் கெளதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பில் வெளியான 'மா’ எனும் குறும்படத்தில் நடித்து பரவலாக கவனம் பெற்றார். இந்நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தில் அஜித்துடன் மீண்டும் நடிக்கிறார் அனிகா என்று தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


