ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு, நீண்ட இடைவெளியான 17 ஆண்டுகள் கழித்து உலக அழகியாக இந்தியாவிலிருந்து தேர்வானார் மனுஷி சில்லர். அவ்வகையில் இந்தியாவுக்கு மீண்டும் அழகு மகுடம் சூட்டிப் பெருமை சேர்த்தவர் இவர்.

உலகம் முழுவதுமான மீடியாவின் உடனடி கவனத்தைப் பெற்றுவிட்ட மனுஷியை திரைப்படங்களில் நடிக்குமாறு பாலிவுட் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மனுஷி ஒரே ஒரு பேட்டியில் நடிகர் அமிர்கானுடன் நடிக்க விருப்பம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

நடிகைகள் மற்றும் பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருவது தான் இன்றைய ட்ரெண்ட். உடை, சூழல் ஆகிவற்றை மாற்றி தினமும் வெவ்வேறு போஸ்களில் படங்களை அப்லோட் செய்து வருகின்றனர்.

போலவே, உலக அழகி மனுஷியும் தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

காதலர் தின ஸ்பெஷலாக தற்போது பிகினி உடையில் தனது படத்தை ‘சம்மர் வைப்ஸ்’என்ற குறிப்புடன் பகிர்ந்திருக்கிறார் மனுஷி.

மேலும் உலகப் புகழ்ப்பெற்ற ஆங்கில இதழான காஸ்மாபாலிட்டனின் அட்டை படத்தை அலங்கரித்த புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார் இந்த உலக அழகி.

இவை உடனடியாக இணையத்தில் வைரலாகி இதுவரை 422,664 லைக்குகளைப் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பின்னூட்டமாக மனுஷியின் பதிவில் எழுதி தங்கள் அன்பைத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவியான மனுஷி, பயிற்சி பெற்ற குச்சிப்புடி நடனக் கலைஞராவார். தற்போது சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக அக்கறையுடன் பல்வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

குறிப்பாக மாதவிடாய் சமயத்தில் பெண்களின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை வழங்கி வரும் ஆர்வலராகச் செயல்படுகிறார் மனுஷி. தற்போது இதுகுறித்து உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


