ரஜினி நடித்து வரும் 'பேட்ட' படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், புகழ் பெற்ற இயக்குநர் மகேந்திரன், விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
சிம்ரன் த்ரிஷா நடித்தாலும் சனந்த் ரெட்டி இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடி என சொல்லப்படுகிறது. என்றாலும் படம் தயாரானதும்தான் ரஜினியின் ஜோடி யார் என்பது அதிகார பூர்வமாகத் தெரியவரும்.
பெரும் நட்சத்திரப் பட்டாளத்துக்கு மத்தியில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் மாளவிகா மோகனன். சர்வதேச அவார்டு இயக்குநரான மஜித் மஜிதியின் புதிய படமான 'பியாண்ட் தி கிளெவுட்ஸ் (Beyond the clouds) -இல் நடித்திருக்கிறார்.
பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் கே யு மோகனனின் மகள்தான் மாளவிகா. வாரணாசியில் நடந்த 'பேட்ட' படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
'எனக்குப் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஓவியம் வரையவும், விளம்பர படங்களில் நடிப்பதும்தான் எனது பொழுதுபோக்கு. இருந்தாலும் 'பட்டம் போல' மலையாள படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.
நான் வாழ்வது மும்பையில். அதனால் ஹிந்திப் படங்களில் நடிக்கலாம் என்று தீர்மானித்தேன். அந்த சமயத்தில் அவார்டு இயக்குநர் மஜித் மஜிதியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்திலேயே ரஜினி சாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய அதிர்ஷ்டம் என பரவசப்பட்டேன். மகிழ்ச்சியிலிருந்து வெளிவர முடியவில்லை.
படத்தில் எனது வேடம் முக்கியமானது, சவாலானதும் கூட. திறமை காட்டி நடிக்க வாய்ப்புகள் தரும் வேடம் எனக்கு கிடைத்திருக்கிறது. எனக்குத் தமிழ் தெரியாது. தமிழ் தெரிந்த பெண்ணிடம் வசனம் பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். வசனம், சூழல் குறித்து சரிவர புரிந்து கொண்டால் முழுமையாக கிடைத்த வேடத்தில் வாழ முடியும்'' என்கிறார் "பேட்ட' படத்தின் மும்பை நாயகி மாளவிகா மோகனன்.
- சுதந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

