மும்பை, ஆக. 31: இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சமீபத்தில் 'கோன் பனேகா க்ரோர்பதி 9’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த ரியாலிட்டி டி.வி நிகழ்ச்சியில் மெகாஸ்டர் அமிதாப் பச்சனைச் சந்தித்தபோது மிகவும் வியப்பும் பிரமிப்பும் அடைந்ததாகக் கூறினார்.
'அமிதாப்ஜியுடனான அந்தச் சந்திப்பு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது! படப்பிடிப்பில் அவரைச் சந்தித்து ஒருசில மணி நேரம் செலவழிக்கப் போகிறேன் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தாலும், அவரை நேருக்கு நேராகப் பார்த்தபோது எனக்கு பிரமிப்பாக இருந்தது. யாராக இருந்தாலும் அப்படிப்பட்ட உணர்வுநிலையை அடைவார்கள் என்பது நிச்சயம். அவருடைய வசீகரமும் பழகும் தன்மையும் அத்தகையது’ என்று கூறினார்.

சோனி என்டர்டெயின்மன்ட் டெலிவிஷனில் இந்நிகழ்ச்சியில் அவருடன் ஹர்மன் பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தானா, பூனம் ரவாட், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜுலன் கோஸ்வாமி மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரும் பங்குபெற்றனர்.
ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஹாட் சீட் எனப்படும் போட்டி இருக்கையில் அமர்ந்து அமிதாப்ஜியுடன் க்ரோர்பதி விளையாட்டு விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. இறுதியில் வெற்றி பெற்ற பணத்தை ஹைதராபாத்திலுள்ள சமூக மேம்பாட்டு நிறுவனமான பிரயாஸுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட 'கோன் பனேகா க்ரோர்பதி 9’ இன்று (வெள்ளிக்கிழமை) ஒளிபரப்பப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


