பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இன்றைய ஹீரோக்களுடன் நடிக்க கஜோல் போடும் ஒரே கண்டிஷன்!

பாலிவுட்டில் இளம் வயது ஹீரோக்கள் தன்னைவிட அதிக வயதான ஹீரோயின்களுடன்

News image
Updated On :1 செப்டம்பர் 2017, 11:50 am

பாலிவுட்டில் இளம் வயது ஹீரோக்கள் தன்னைவிட அதிக வயதான ஹீரோயின்களுடன் ஜோடியாக நடிப்பது புதிதல்ல. கரீனா கபூர் கான் இரண்டு இளம் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ஏக் மேன் ஆர் ஈக் துக் மற்றும் கோரி தேரே பியார் மெயின் ஆகிய படங்களில் இம்ரான் கானுடனும் கி & கா படத்தில் அர்ஜுன் கபூருடன் நடித்துள்ளார். ஐஷ்வர்யா ராய் பச்சன் தன்னைவிட இளையவரான ரன்பிர் கபூருடன் ஏ தில் ஹய் முஷ்கிலில் ஜோடியாக நடித்துள்ளார். விஐபி 2 -வி ல் கஜோல் தனுஷுடன் நடித்திருந்தாலும், அவர்கள் அதில் ஜோடியாக நடிக்கவில்லை.

இளைய கதாநாயகருடன் வேலை செய்வது விளையாட்டுத்தனமாக இருக்குமா என்பது பற்றி கஜோலிடம் கேட்ட போது, அவர் சிரித்தபடி பதிலளித்தார், "இது திரைக்கதை சார்ந்த விஷயம். ஒரு படத்தின் கதை அதைக் கோரினால் என்னை விட வயது குறைந்த நடிகருடன் ஜோடியாக நடிப்பதை தவிர்க்க மாட்டேன். இன்றைய திரைப்படங்கள் பல்வேறுவிதமான கதைகளைக் கொண்டிருக்கின்றன, திரைப்பட இயக்குனர்கள் அவற்றை பொறுப்புணர்வுடனும் முதிர்ச்சியுடனும் கையாளுகின்றனர், இது மிக நல்ல விஷயம்’ என்றார் கஜோல்.

இந்தத் தலைமுறை நடிகர்களுள் யாருடன் ஜோடியாக நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு கஜோல் யாரையும் பெயரிடவில்லை என்றாலும் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் சொன்னார். 'என்னுடன் ஜோடியாக நடிக்கக் கூடிய நடிகர் சற்று முதிர்ச்சியுடன் மேன்லியாக இருக்க வேண்டும், பாயிஷ்ஷாக அதாவது மிகவும் இளைய தோற்றத்தில் இருக்கக் கூடாது. நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டேன்’ என்றார் கஜோல்.

ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டது போல் காஜோலுடன் ரன்வீர் விரைவில் நடிக்கக் கூடும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.