சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கத்தில் பாகுபலி 2 படம் முக்கிய சாதனை ஒன்று புரிந்துள்ளது.
இதுவரை அந்தத் திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த படமாக எந்திரன் இருந்தது. இப்போது அதை பாகுபலி 2 முறியடித்துள்ளதாக அந்தத் திரையரங்கின் இயக்குநர் ராகேஷ் கெளதமன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 4 வாரங்களைக் கடந்து அத்திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பாகுபலி 2 படம்.
கடந்த சில வருடங்களாக குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அதிக நாள்கள் ஓடிய, அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட படங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்கில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள இதர திரையரங்குகளிலும் பாகுபலி 2 படம் இதுபோன்ற சாதனைகளைப் படைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிநடை போட்டுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பார்சிலோனா அசத்தல் வெற்றி: கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


