ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்பட்ட பாகுபலி 2 படம் மகத்தான சாதனை ஒன்றைச் செய்துள்ளது.
இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2, நேற்றுடன் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ரூ. 400 கோடி வசூலைக் கண்ட முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் முதல் வாரம் ரூ. 247 கோடி வசூலை அடைந்த ஹிந்தி பாகுபலி 2, அடுத்த வாரம் பெரிய அளவில் குறையாமல் ரூ. 143 கோடியை அள்ளியது. நேற்று இதன் வசூல் ரூ. 400 கோடியைத் தொட்டது. கடந்த வியாழன் அன்று கூட ஹிந்தி பாகுபலி 2, இந்தியாவில் ரூ. 13 கோடி வசூலைப் பெற்றது. அந்தளவுக்கு இன்னமும் மக்களின் மகத்தான பேராதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் ரூ. 100 கோடியைத் தொட்ட முதல் படம் - கஜினி (2008). அடுத்த வருடம் வெளியான 3 இடியட்ஸ் ரூ. 200 கோடியைத் தொட்டது. 2014-ல் வெளியான பிகே ரூ. 300 கோடி என்கிற உயரத்தைத் தொட்டது. அமீர் கான் படங்களே ஒவ்வொருமுறையும் புதிய உயரத்தை நிர்ணயிக்கும்போது, இப்போது ஹிந்தித் திரையுலகுக்கு அறிமுகம் இல்லாத ராஜமெளலி - பிரபாஸ் கூட்டணி இந்த நம்பமுடியாத சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


