தில்லியில் 64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. தேசியத் திரைப்பட விருது வரலாற்றில் சண்டைக் கலைஞர்களுக்கு இதுவரை எந்த அங்கீகாரமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இம்முறை சிறந்த சண்டைக் கலைஞருக்கான விருதும் அறிவிக்கப்பட்டது. 'புலிமுருகன்' திரைப்படத்துக்காக பீட்டர் ஹெய்னுக்கு அந்த விருது கிடைத்தது. மேலும் 'புலி முருகன்' உள்ளிட்ட 4 படங்களில் சிறப்பாக நடித்ததற்காக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய விருது பெற்ற இரு கலைஞர்களும் மீண்டும் கைகோக்க உள்ளார்கள். மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் படத்தை பீட்டர் ஹெய்ன் இயக்கவுள்ளார். இத்தகவலை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் படம் சர்வதேச ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்படுகிறது. எனவே சீனம், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் இப்படத்தை இயக்கவுள்ளார் பீட்டர் ஹெய்ன். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தப் படம் அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


