நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

துருவங்கள் 16 இயக்குநரின் அடுத்தப் படத்தில் ஸ்ரேயா!

தமிழில் மிகக்குறைவான படங்களில் நடித்துவரும் ஸ்ரேயா, தற்போது... 

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:26 pm

எழில்

துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிக கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசுரன். 

அரவிந்த் சாமி - தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகியோர் இதில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. 

கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் நாக சைதன்யா. அதன்பிறகு அவர் நடிக்கும் தமிழ்ப் படமாக இது இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படத்திலிருந்து நாக சைதன்யா விலகியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். ஜூலைக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை கார்த்திக் நரேன், கெளதம் மேனன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

2012-க்குப் பிறகு தமிழில் மிகக்குறைவான படங்களில் நடித்துவரும் ஸ்ரேயா, தற்போது சிம்பு நடிக்கும் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.