சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

விஜய் டிவியில் ஜூன் முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்!

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில்...

News image
Updated On :4 மே 2017, 6:51 am

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேசப் புகழ்பெற்ற பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. இதை கமல் தொகுத்து வழங்குகிறார். 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாள்கள் ஒன்றாக இணைந்து வசிப்பார்கள். வெளியுலகத் தொடர்பு, தொலைத்தொடர்பு என எதுவுமின்றி. இதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் கலந்துகொள்வது பற்றி கமல் கூறியதாவது: இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் என்னை அணுகியபோது முதலில் சிரித்தேன். என் வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயம் உள்ளிட்ட அனைத்தும் அனைவராலும் கண்காணிக்கப்படுகிறது. இங்கு பொறுப்புகள் தலைகீழ். தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை நான் கண்காணிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஜூன் 18 முதல் ஆரம்பமாகவுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.