பிரேமம் மலையாளப் படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அழுத்தமாக அறிமுகம் ஆனவர் நிவின் பாலி. நேரம் படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் தற்போது நடித்துவரும் படம் ரிச்சி. கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், நட்ராஜ், பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடிக்கும் இப்படத்தை மிஸ்கினிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கெளதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். தூத்துக்குடியில் வசிக்கும் ரெளடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார். இதில் அவர் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்.
ரிச்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு அதிக வரவேற்பைப் பெற்றது. இதுவரை இதற்கு ஃபேஸ்புக்கில் 66 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் கூறியதாவது: டீசரின் பிரமாண்ட வெற்றிக்கு என் மார்க்கெட்டிங் குழுவைப் பாராட்டுகிறேன். படங்கள் பார்ப்பவர்களில் 60 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கில் உள்ளதை அறிந்துகொண்டோம். அதனால் நிவின் பாலியின் ஃபேஸ்புக்கில் டீசரைப் பகிர்ந்தோம். இரண்டு மணி நேரங்களில் 10 லட்சம் பார்வைகளை யூடியூபில் பெற்று டீசர் ஆச்சர்யப்படுத்தியது. பிரபலங்கள் பலரும் இந்த டீசர் குறித்து கருத்து சொன்னது மிகவும் உதவியது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


