எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கதாநாயகிகளுக்கு ஃபெப்ஸி அமைப்பு புதிய கட்டுப்பாடு!

தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரியும் கதாநாயகிகள் தங்களுடைய மேக்கப் காஸ்டியூம் உதவியாளர்களை மும்பையிலிருந்து...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

எழில்

ஃபெப்ஸி என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஃபெப்ஸி  அமைப்பின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செல்வமணி, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:  

ஃபெப்ஸி அமைப்பின் உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்த் திரைப்படங்கள் ஃபெப்ஸி உறுப்பினர்களுடன் பணிபுரியவேண்டும். இது தயாரிப்பாளர் சங்க, இயக்குநர் சங்கம் போன்றவற்றுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இனி ஃபெப்ஸி ஊழியர்களுக்குத் தினசரி ஊதியம் வழங்கப்படும்.

ஃபெப்ஸி அமைப்பின் பொன்விழா ஆண்டாக உள்ளதால் அது சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படும்.

தமிழ்த் திரைப்படத் துறை 100 ஆண்டுகளைக் கடந்துள்ளதால் அதன் விழாவையும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையும் இணைத்து ஒரே விழாவாகக் கொண்டாடப்படும்.

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் வெளிமாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலை மாறிட தமிழக அரசு பழைய முறைப்படி பழைய கட்டண விகிதங்களில் பொது இடங்களில் படப்பிடிப்புக்கான கட்டணங்களை நிர்ணயித்து வசூலிக்கவேண்டும்.

தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரியும் கதாநாயகிகள் தங்களுடைய மேக்கப் காஸ்டியூம் உதவியாளர்களை மும்பையிலிருந்து அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும். நமது சம்மேளன தொழிலாளர்களையே பணிக்கு அமர்த்தவேண்டும்.

இவ்வாறு  பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டன.

23 திரை அமைப்புகளின் ஒருங்கிணைந்த தலைமையகமாக ஃபெப்ஸி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை பதவி வகித்து வந்த சிவா தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னையில் உள்ள ஃபெப்ஸி அலுவலக வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த தேர்தலில், வாக்கு எண்ணிக்கை பிற்பகலில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி தேர்வு செய்யப்பட்டார். செயலாளர் பதவிக்கு சண்முகம் தேர்வானார். பொருளாளராக சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.