வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ள இயக்குநர் கரண் ஜோஹருக்கு நடிகர் ஷாருக் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநரான கரண் ஜோஹர், வாடகைத்தாய் மூலம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மருத்துவ அறிவியலின் அற்புதத்தால் ரூஹி மற்றும் யாஷ் ஆகிய இரு குழந்தைகளுக்குத் தந்தையாகி உள்ளேன். இந்த முடிவை எடுக்க நான் என்னை மனரீதியாகவும், உணர்வுபூர்மாகவும், பொருளாதார ரீதியாகவும் தயார் செய்துள்ளேன். எனது குழந்தைகள் தான் எனது உலகம். அவர்களே எனக்கு முக்கியம். என் மீது அக்கறை செலுத்தும் அம்மா எனக்குக் கிடைத்துள்ளார். அவர் பேரக்குழந்தைகளை அருமையாக வளர்ப்பார். என் நீண்டநாள் கனவை நனவாக்கிய வாடகைத் தாய்க்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்று கூறினார்.
கரண் ஜோஹரின் இந்த முடிவுக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ஷாருக் கான் இதுபற்றி கூறும்போது: அவருக்கு என் வாழ்த்துகள். அவர் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். நானும் இதுபோன்ற நிலையில் இருந்துள்ளேன். இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. எனவே நாம் அதை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஷாருக் கானின் இளைய மகன் ஆப்ரம், வாடகைத் தாய் மூலமாகப் பிறந்த குழந்தையாவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


