தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரயிலில் புதுப்பட புரமோஷன் வைத்ததோடு ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரசிகர்களைச் சந்திக்கிறாராம் ஷாருக்!

‘உயிரே’ படத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் முதுகில் நின்று கொண்டு ஷாருக் மற்றும் மலாய்க்கா ஆடும் தைய்ய, தைய்ய, பாடலை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை

News image
Updated On :24 ஜனவரி 2017, 12:34 pm

ஷாருக் தனது ‘ரயீஷ்’ பட புரமோஷனுக்காக டெல்லியில் இருந்து மும்பை வரை ரயிலிலேயே பிரயாணம் செய்யவிருப்பது தான் இப்போதைய பாலிவுட் ஸ்பெஷல் ‘ஹீரோ டிரெண்ட்’. ஒவ்வொரு ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போதும் ஷாருக் தனது ரசிகர்களைச் சந்திப்பாராம். இது ஷாரூக் தனது ரசிகர்களுக்க்காக திட்டமிட்ட சர்ப்ரைஸ் விஸிட். அதிருக்கட்டும்; இதென்ன ஷாருக் திடீரென்று இப்படி கிளம்பி விட்டாரே என்று நினைப்பவர்கள் இருந்தால் அவர்கள் ஷாருக்கான் இதுவரை நடித்த திரைப்படங்கள் அத்தனையையும் ஒருமுறை நினைவிலோட்டிப் பார்க்கவும்; பெரும்பாலான திரைப்படங்களில் ஷாருக்குக்கும், ரயிலுக்கும் மிக நெருக்கமான பந்தம் இருக்கும்.

ஷாருக்குக்கும் ரயிலுக்கும் இருக்கும் பந்தத்தை இந்தப் படத்தின் புரமோஷன் ட்ரிப் வாயிலாகவும் மீண்டும் ஒருமுறை மெய்பித்திருக்கிறார்.

‘குச், குச் கோத்தா ஹை’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கஜோலுக்காக ரயிலில் இருந்து ஷாருக் கை நீட்டுவது அப்படத்தின்  மோஸ்ட் ரொமாண்டிக் சிக்னேச்சர் ஸீன்.

‘மெயின் ஹூன் நா’ திரைப்படத்தில் ஷாருக் அறிமுகமே ரயில்வே பிளாட்பாரத்தில் தான் தொடங்கும்.

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படமே முக்கால்வாசி ரயிலில் எடுக்கப் பட்டது தான்.

‘உயிரே’ படத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் முதுகில் நின்று கொண்டு ஷாருக் மற்றும் மலாய்க்கா ஆடும் தைய்ய, தைய்ய, பாடலை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
 
இப்படி ரயிலை தான் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் அதிர்ஷ்ட அடையாளமாகக் கடந்து வந்த ஷாருக் தனது புதுப்பட புரமோஷனை ரயில் பிரயாணமாகவே திட்டமிட்டதில் ஆச்சரியமே இல்லை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.