பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் - பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தயாரிப்புகளில் தனித்துவம் பெற்ற விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்நிலையில், பைரவா படத்துக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து, 12-ம் தேதிக்குள் படத்தயாரிப்பாளர், தமிழக அரசு, திரையரங்கு அதிபர்கள் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதுபற்றி புகார் அளிக்கக்கூடிய விவரத்தையும் சமர்ப்பிக்க உத்தவிரப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் வழக்கால் படம் திட்டமிட்டப்படி 12-ம் தேதி வெளியாகுமா என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. சிலவாரங்களுக்கு முன்பு, "சிங்கம் 3' படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடுத்ததாக இதே விவகாரத்தில் பைரவா படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்களைவிட கூடுதலாக 10 சதவீத பெண்கள் வாக்குப் பதிவு
இன்றைய ராசி பலன் (25.04.2026) - மகரம்

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு மரண தண்டனை

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


