அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் - டாய்லெட் ஏக் பிரேம் கதா (Toilet Ek Prem Katha). தூய்மை இந்தியா திட்டத்துக்கான என்னுடைய சிறிய பங்களிப்பு என்று இப்படம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் அக்ஷய் குமார்.
தூய்மை இந்தியா என்கிற ஸ்வ்ச் பாரத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 2019-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத சுகாதாரமான சமூகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேச மேம்பாட்டுக்கும், வீணாகும் குப்பைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
தூய்மை குறித்த கூடுதல் விழிப்புணர்வை அக்ஷர் குமாரின் படம் ஏற்படுத்துகிறது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக இந்தியாவிலுள்ள 125 கோடி மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று படத்தின் டிரெய்லரைப் பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். இதனால் இந்தப் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்தது.
இப்படத்தை ஸ்ரீ நாராயண் சிங் இயங்கியுள்ளார். பூமி பெட்னேகர், அனுபம் கெர் போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் முதல் மூன்று நாள்களில் கிட்டத்தட்ட ரூ. 48 கோடி வசூலித்துள்ளது, டாய்லெட் ஏக் பிரேம் கதா. முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 13 கோடி வசூல் கிடைத்தது. அடுத்த ஒரு தினங்களில் ரூ. 17 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்துள்ளது. எனவே வார இறுதி நாள்களில் அபாரமான வசூலைப் பெற்று ஹிட் என்கிற நிலையை அடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


