ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வெளிநாடு செல்ல நடிகை குஷ்புவுக்கு அனுமதி!

வெளிநாடு செல்ல அனுமதி கோரி நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

News image
Updated On :26 ஏப்ரல் 2017, 12:03 pm

வெளிநாடு செல்ல அனுமதி கோரி நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் அவருக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகை குஷ்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆண்டிப்பட்டி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிப்பட்டி போலீஸார் என்மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. மேலும் எனது கடவுச்சீட்டை புதுப்பித்து தரக்கோரிய வழக்கில், நான் வெளிநாடு செல்லும்போது எந்த நாட்டுக்கு செல்கிறேன். எங்கு தங்குகிறேன் என்ற விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், எனது குடும்பத்துடன் பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறேன். எனவே நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்நிலையில், வெளிநாட்டுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல குஷ்புவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.