ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சத்யராஜ் உருவ பொம்மை எரிப்பு: வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரில் போராட்டம்!

சத்யராஜ் உருவ பொம்மையை எதிர்த்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2017, 7:24 am

சத்யராஜ் உருவ பொம்மையை எதிர்த்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ், கர்நாடகத்துக்கு எதிராகப் பேசியதாக குற்றம்சாட்டி, அவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள 'பாகுபலி-2' திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாகுபலி-2 படத்தை வெளியிட அனுமதிக்குமாறு கன்னட அமைப்பினரிடம் படத்தின் இயக்குநர் ராஜமெளலி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) விடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், '9 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்த ஒரு கருத்து உங்களை காயப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே தயாரித்த பாகுபலி முதல் பாகம் உள்பட சத்யராஜ் நடித்த பல திரைப்படங்கள் கடந்த 9 ஆண்டுகளில் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் சத்யராஜ் ஏற்றுள்ளார். அவர் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்ல' என்று ராஜமெளலி கூறியுள்ளார். ஆனால், சத்யராஜ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று கன்னட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .

இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து நடிகர் சத்யராஜ் பேசிய விடியோ, கர்நாடகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் கடந்த சில நாள்களாக வேகமாகப் பரவி வருகிறது. இது, பாகுபலி-2 படத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றைய தினம் 'பெங்களூரு பந்த்' என்ற பெயரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இது குறித்துத் கூறியதாவது: ராஜமெளலி அல்லது அவர் எடுத்துள்ள திரைப்படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அப்படத்தில் நடித்துள்ள சத்யராஜ் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும். ஏப்ரல் 28-ஆம் தேதி கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெறும். சத்யராஜின் மன்னிப்பைத் தவிர வேறு எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்றார்.

இதையடுத்து தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ். இதுகுறித்து வீடியோவின் வழியாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் பெங்களூரில் இன்று போராட்டம் நடத்தினார்கள். சத்யராஜ் உருவபொம்மையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. வருத்தம் தெரிவித்து சத்யராஜ் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு நிலைமை சுமூகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.