பாகுபலி-2 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. இதனால் ஏப்ரல் 28 அன்று எவ்விதத் தடையுமில்லாமல் படம் வெளியாகிறது.
மெகா பட்ஜெட்டில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் பாகுபலி 2ம் பாகம் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடத் தடை கோரி, ஏசிஇ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தப் படத்தில் தமிழக விநியோக உரிமையைப் பெற்றுள்ள ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் நிறுவன உரிமையாளர் சரவணன், தங்கள் நிறுவனத்திடம் ரூ. 1.18 கோடி கடன் பெற்றார். அப்போது, இந்தத் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக, கடன் தொகையுடன் கூடுதலாக ரூ. 10 லட்சம் சேர்த்து திருப்பித் தருவதாக கூறியிருந்தார். ஆனால், கூறியபடி இதுவரை பணத்தைத் தரவில்லை. எனவே, கடன் தொகை முழுவதும் அவர் திருப்பித் தரும் வரை, பாகுபலி-2 படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது பதிலளிக்குமாறு பட விநியோகஸ்தருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பும் சமாதானம் ஆயின. ஏசிஇ நிறுவனத்துக்கு ரூ. 1.28 கோடி பணத்தைத் திருப்பித்தந்தது ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன். இதனால் இவ்வழக்கை முடித்துவைத்தது உயர் நீதிமன்றம். இதையடுத்து ஏப்ரல் 28 அன்று எவ்விதத் தடையுமில்லாமல் படம் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வில்லியனூா் மாதா கோயிலில் திருட்டு

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


