பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் பாகுபலி படத்துக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த ஏசிஇ மீடியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதன் மனுவில், பாகுபலி 2 படத்தின் தமிழ்நாடு உரிமையைப் பெற்றிருக்கும் ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனத்தின் சரவணன் எங்களிடம் ஒரு கோடியே 18 லட்சம் கடன் பெற்றார். படம் வெளியாகும் முன்பு 10 லட்சம் ரூபாய் சேர்த்துக்கொடுப்பதாக கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். பாகுபலி 2 படம் 28-ம் தேதி வெளியாகிற சூழலில் தமிழக விநியோக உரிமையை வேறொரு நபருக்கு அதிக விலைக்கு விற்பதாகத் தெரிகிறது. வாங்கிய கடனைத் திரும்பத் தராததாலும் பாகுபலி 2 படத்தின் விநியோக உரிமையை 3-வது நபருக்கு மாற்றியுள்ளதாலும் இதனைக் கருத்தில் கொண்டு படத்தை வெளியிடவும் விநியோக உரிமையை 3-வது நபர்க்கு மாற்றவும் தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. பாகுபலி 2 படத்துக்குத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதி ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


